×

தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்; ரூ.52 ஆயிரத்தை நெருங்கும் சவரன்: தொடர் அதிகரிப்பால் நகை வாங்குவோர் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்து சவரன் ரூ.52 ஆயிரத்தை நெருங்கியது. தொடர் அதிகரிப்பால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த மாதம் 1ம் தேதி முதல் 29ம் தேதி வரை சவரனுக்கு ரூ.4,400 வரை உயர்ந்தது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் கடந்த 30ம்தேதி ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த தங்கம் விலை பெயரளவுக்கு அதாவது கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,370க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.50,960க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நேற்று தங்கம் மார்க்கெட் மீண்டும் தொடங்கியது.

அதில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது, நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,455க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,560க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை சவரன் ரூ.52 ஆயிரத்தை நெருங்கியது நகை வாங்குவோருக்கு மேலும், மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் நடத்தை விதியால், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை கொண்டு செல்லக்கூடாது என்பதால் நகை கடைகளில் தங்கம் விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

The post தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்; ரூ.52 ஆயிரத்தை நெருங்கும் சவரன்: தொடர் அதிகரிப்பால் நகை வாங்குவோர் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Savaran ,CHENNAI ,Dinakaran ,
× RELATED மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை: சவரன் எவ்வளவு தெரியுமா?